
அதவிட, ரொம்ப வருஷத்துக்கு பிறகு சரோஜாதேவி, இந்த படத்துல நடிக்க சம்மதிச்சிருக்கிறாங்க. இவங்க கூட , வடிவேலு, முரளி, பெப்சி விஜயன்,ரமேஷ் கண்ணாவும் நடிக்கிறாங்க.முதல் ஷூட்டிங் சென்னையில, செட்டிநாட்டு பேலஸ்ல 200 சின்னபசங்கள வைச்சு ஒரு பாட்டு செஞ்சிருக்காங்க. இந்த பாட்டுக்கு காயத்திரி ரகுராம், பாடல் வடிவமைப்பு செய்து கொடுக்க, வாலியின் வரிகளில் உருவான 'டெக்கோ டெக்கோ' என்ற பாடல படமாக்கப்போறாங்க.
அதுக்கு பிறகு ஏ.வி.எம் ஸ்டூடியோவில் இன்னுமொரு பாட்டு ஷூட்டிங் செய்யப்போறாங்க. அதில சூர்யா, நயன்தாரா, கூட சரோஜா தேவி, முரளி எல்லாமே பாட்டுல வரப்போறாங்களாம், இந்த ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, தமிழ் சினிமா இது வரைக்கும் போகாத ஒரு இடம்னு,ஐஸ்லாந்துல அடுத்த பாட்டையும் பண்ணப்போறாங்களாம். 'ஏனோ, ஏனோ, பனித்துளி' ன்னு தொடங்கும் இந்த பாட்டை தாமரை எழுதியிருக்காங்க. தினேஷ் கொரியாகிரபி பண்ணப்போறாரு.இப்போதைக்கு ஆதவன் பத்தி கிடைச்ச நியூஸ் இவ்வளவுதான். திருப்பியும் நியூஸ் கிடைக்கிற நேரம் எழுதுவோம்.